LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, January 3, 2020

தமிழகத்தின் ஊரக உள்ளாட்சித் தேர்தல்: தி.மு.க. முன்னிலையில்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு
எண்ணும் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் இன்று இரவு 7 மணி வரையான நிலைவரம் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இரு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தொடக்கத்தில் இருந்தே அ.தி.மு.கவும் தி.மு.க.வும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றன.

மொத்தமுள்ள 515 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் அ.தி.மு.க. 243 இடங்களிலும், தி.மு.க. 267 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. மற்றும் இரு இடத்தில் ஏனைய தரப்பு முன்னிலை வகிக்கிறது.

இதேபோல், மொத்தமுள்ள 5,067 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் அ.தி.மு.க. 2,182 இடங்களிலும், தி.மு.க. 2,346 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. மற்றவர்கள் 558 இடங்களில் முன்னிலை வகிக்கின்றனர்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7