தணிப்பதற்கு, இந்தியாவின் சமாதான முயற்சியை வரவேற்பதாக இந்தியாவுக்கான ஈரான் தூதுவர் அலி செகேனி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள ஈரான் தூதரகத்தில் சுலைமானிக்கு இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “உலகில் அமைதியை நிலைநாட்டுவதற்கு இந்தியா மிகச்சிறந்த பங்கு வகிக்கிறது. அதேநேரத்தில் இந்தியா இந்தப் பிராந்தியத்தில் உள்ளது. பதற்றங்கள் அதிகரிப்பதை அனுமதிக்காத அனைத்து நாடுகளிடம் இருந்தும், குறிப்பாக எங்களின் நல்ல நட்பு நாடான இந்தியாவிடம் இருந்தும் அனைத்து முயற்சிகளையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
நாங்கள் போரை விரும்பவில்லை. இந்தப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் அமைதி மற்றும் செழிப்பை எதிர்பார்க்கிறோம். இந்த உலகில் அமைதி மற்றும் செழிப்புக்கு உதவும் வகையில், இந்தியாவின் எந்தவொரு சமாதான முயற்சி அல்லது திட்டமாக இருந்தாலும் அதனை நாங்கள் வரவேற்கிறோம்” என்று தெரிவித்தார்.
ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர், ஜாவத் ஜரிப், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ ஆகியோரை இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடர்புகொண்டு பேசியிருந்தார். அப்போது அமெரிக்கா-ஈரான் இடையிலான பதற்றம் குறித்து கவலை தெரிவித்திருந்தார்.
இதவேளை, ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே முன்னெப்போதும் இல்லாத வகையில் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரான் இராணுவத் தளபதி காசிம் சோலெய்மனி கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து எந்த நேரத்திலும் அமெரிக்கா பதில் தாக்குதலை நடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.