மிலேனியம் சவால்கள் ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுவது தொடர்பாக தீர்மானம் எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் அலிஸ் வேல்ஸ்ஸுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு இரு நாட்டினுடைய ஜனநாயகத்தையும் மதிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சந்திப்பின்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கடிதமொன்றை இலங்கை ஜனாதிபதியிடம் அலைஸ் வெல்ஸ் கையளித்தார்.