இன்று (வெள்ளிக்கிழமை) தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட தம்மிக்க பிரியந்த, வவுனியாவில் ஊடகவியலாளர்களுடன் முதல் சந்திப்பை மேற்கோண்டார்.
மக்களுடன் நெருக்கமாக பழகுபவர்கள் ஊடகவியலாளர்களே என்ற வகையில் வவுனியா மக்கள் எதிர்நோக்கும் விடயங்கள் வவுனியாவில் பொலிஸாரால் மக்களுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக இதன்போது கேட்டறிந்து கொண்டார்.
இந்நிலையில் டெங்கு கட்டுப்பாட்டுக்காக முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள், விபத்துக்களை குறைப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் கால்நடையால் ஏற்படும் விபத்துக்களை கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய பொறிமுறைகள் தொடர்பாகவும் பிரதி பொலிஸ்மா அதிபருக்கும் ஊடகவியலாளர்களுக்குமிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதேவேளை அவரச அழைப்பின்போது பொலிஸார் தாமதமாக குறித்த பகுதிக்கு வருகின்றமை மற்றும் வைரவபுளியங்குளம், வைரவர் ஆலய வீதியில் அதிவேகமான மோட்டார் சைக்கிள் செலுத்தப்படுகின்றமை தொடர்பாகவும் ஊடகவியலாளர்களினால் இதன்போது எடுத்துக்கூறப்பட்டது.
மக்கள் தமது பிரச்சனைகளை நேரடியாக தன்னுடன் தொடர்புகொண்டு கலந்துரையாட முடியும் எனவும் பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலய வாயிற்கதவு மூடப்படாமல் எந்நேரமும் திறந்தே இருக்கும் எனவும் தம்மிக்க பிரியந்த தெரிவித்தார்.