பெற்ற தீவிரவாதிகள் எதிர்வரும் ஜனவரி 26ஆம் திகதி குடியரசு தினத்தன்று டெல்லி- குஜராத் ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய 6 தீவிரவாதிகள், நேபாளத்துக்கு தப்பிச்சென்று அங்கிருந்து மீண்டும் இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தன.
அவர்களுள் மூவர் கடந்த 9ஆம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில், துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அவர்களை தொடர்ந்து நான்காவதாக ஒரு தீவிரவாதியும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் உத்தரபிரதேசத்தில் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படும், மீதமுள்ள இரு தீவிரவாதிகள் குடியரசு தினத்தன்று தாக்குதல்களை நிகழ்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.