பேசிய நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
அதற்கமைய மெரினா கடற்கரையில் இன்று (புதன்கிழமை) காலை பா.ஜ.க.வினரால் இந்த மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி எஸ்.டி.பி., கட்சி சார்பில் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் மாநாடு நடந்தது.
அதில் பங்கேற்று பேசிய நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் குறித்து அவதூறு பரப்பியதாக பா.ஜ.க.வினர் பொலிஸில் முறைப்பாடு அளித்தனர்.
இதையடுத்து அவர்மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த பொலிஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களிலும் பாரதிய ஜனதா கட்சியினர் நெல்லை கண்ணன் மீது முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, பா.ஜ.க. பொது செயலாளர் எச்.ராஜா நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது, நெல்லை கண்ணனை கைது செய்யக் கோரி மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி மெரினா கடற்கரையில் பா.ஜ.க.வினர் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
போராட்டம் நடத்திய பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர்.