செய்வதற்கான கருத்து கேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது.
குறித்த கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் இடம்பெறவுள்ளது.
இதன்படி பா.ஜ.க மேலிட பொறுப்பாளர்கள் அக்கட்சியின் மாநில நிர்வாகிகளிடம் கருத்து கேட்கவுள்ளனர்.
அத்துடன் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன், முருகானந்தம் ஆகியோரில் ஒருவர் தலைவராகத் தெரிவு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த செப்டம்பர் முதலாம் திகதி தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
அதன் பின் கடந்த 4 மாதங்களாக அக்கட்சியின் தமிழகத் தலைவர் பதவிக்கு வெற்றிடம் நிலவுகிறது. தலைவர் இல்லாமல் உள்ளாட்சித் தேர்தலையும் பா.ஜ.க சந்தித்தது. மாநில நிர்வாகிகளிடம் கருத்து கேட்கும் பா.ஜ.க மேலிடம் அக்கட்சியின் தமிழகத் தலைவர் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.