காலை 10 மணிக்கு கூடுவதுடன் கூட்டத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றவுள்ளார்.
தமிழக சட்டசபையின் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரம் நடைபெறுவதுடன் நாளை ஆரம்பிக்கும் கூட்டத்தொடர் எதிர்வரும் 10ஆம் திகதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ஆம் திகதி முடிக்கப்பட்டு புதிதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஜனவரி 6ஆம் திகதி பதவியேற்கிறார்கள்.
இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முடிவுகளுக்குப் பின்னர் தமிழக சட்டப்பேரவை கூடுவதால் அந்த முடிவுகள் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து சட்டப் பேரவையில் காரசார விவாதங்கள் நடைபெறும்.
மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருவதால், பேரவையில் கடும் விவாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, ஆளுநரின் உரையில் தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் இடம்பெறும் எனவும் ஆளுநர் உரையாற்றி முடிந்ததும் சட்டசபைக் கூட்டம் விவாதம் இன்றி முதல்நாளில் முடிவடையும்.
இதையடுத்து சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் கூடி சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்தலாம் என முடிவு செய்வார்கள்.