ஐந்து தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 14ம் ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில் 14ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) திருகோணமலை கடற்கைரக்கு முன்பாக நடைபெற்றது.
தமிழ்த் தேசிய கட்சியின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இவ் நினைவு கூரல் நிகழ்வில், முன்னாள் வடமாகாணசபை உருப்பினர் சிவாஜிலிங்கம் பங்கேற்று ஈகைச்சுடரினை ஏற்றி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி மாலை திருகோணமலை கடற்கரை பகுதியில் பொழுது போக்குக்காக கூடியிருந்தவேளை, ஆட்டோவொன்றில் வந்த ஆயுததாரிகளினால் இந்த மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு காந்தி சிலை சுற்று வட்டத்திற்கு அருகாமையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதில் மனோகரன் ரஜீகர், யோகராஜா ஹேமச்சந்திரா, லோகிதராஜா ரோகன், தங்கதுரை சிவானந்தா, சண்முகராஜா கஜேந்திரன் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
இப்படுகொலைகள் குறித்த அதிகாரபூர்வ விசாரணைகள் நடைபெறுவதாக அவ்வப்போது கண் துடைப்புகள் நடந்து வந்த போதிலும் இந்த மாணவர்கள் படுகொலைக்கு இன்றளவும் நீதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.