கொழும்பு பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய அனைத்து பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் 2.11% ஆகவும் S&P SL20, 2.64% ஆகவும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதேவேளை, ஈராக்கிலுள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, மசகு எண்ணெயின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
இதன்பிரகாரம் ப்ரென்ட் சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 2.5 வீதத்தால் அதிகரித்து 69 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இதேவேளை, தங்கம் மற்றும் ஜப்பான் யென்னின் பெறுமதியும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
மேலும் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் அதிகரித்துள்ள போர் பதற்றம் காரணமாக பயணப்பாதையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனம் இன்று காலை அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.