கடந்த வெள்ளிக்கிழமை கடலுக்கு செல்வதாக கூறிச் சென்ற 32 வயதுடைய யூலியன் யூட் என்ற நபர் காணாமற்போனதை அடுத்து உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவரின் உடல் சுனாமி நிறைவு தூபிக்கு அருகில் கரையொதுங்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.