எண்ணும் மையத்தில் இருகட்சியினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனை தடுக்க 100க்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதோடு வாக்கு எண்ணும் மையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டோர் மீது பொலிஸார் தடியடி நடத்தியுள்ளனர்.
ஊராட்சிமன்ற தலைவர் பதவியில் வெற்றி பெற்றதை அதிகாரிகள் அறிவிக்கவில்லை எனக்கூறி சாலைமறியல் செய்தனர். சாலைமறியலில் ஈடுபட்ட வேட்பாளர் தவமணி, உறவினர்களுடன் மற்றொரு தரப்பினர் வாக்குவாதம் நடத்தினர்.
வாக்குவாதம் முற்றி இருதரப்பினரும் மோதலில் ஈடுபட்டதால் பொலிஸார் தடியடி நடத்தி கலைத்தனர். தடியடி சம்பவத்திற்கு பின் வேட்பாளர் தவமணி வெற்றி பெற்றதாக அதிகாரிகள் அறிவித்தனர்.
இதேவேளை திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தி கலைத்தனர். மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்களை அனுமதிப்பதில் பொலிஸார் கட்டுப்பாடுகளை விதித்ததாகவும் கூறப்படுகிறது.
இதை அடுத்து பொலிஸாருடன் முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் இரு தரப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து பொலிஸார்தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.