விபத்தில், பெண்னொருவர் உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விக்டோரியா ட்ரைவ் மற்றும் 43ஆவது அவென்யூ பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இந்த விபத்தின் போது, 68வயதான பெண்னொருவர் வாகனத்தால் மோதப்பட்டு உயிராபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண், விபத்தில் சிக்கிய போது வீதியின் குறுக்காக பாய்ந்தாரா என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லையென்ற போதும், இந்த விபத்தில் ஒன்று அல்லது இரண்டு வாகனங்கள் தொடர்பு பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.
எனினும், விபத்து ஏற்பட்ட பிறகு, இரண்டு வாகனங்களின் சாரதிகளும் சம்பவ இடத்திலேயே தரித்து நின்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து மேலதிக தகவல் எதனையும் வெளியிடாத பொலிஸார், இவ் விபத்து குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.