கடுமையான பனிப்பொழிவு நிலவுவதால், வாகனச் சாரதிகள் எச்சரிக்கையாக வாகனத்தை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடுமையான குளிர்கால சூழ்நிலை காரணமாக சில்லிவாக் மற்றும் ஹோப் இடையேயான நெடுஞ்சாலை 1 இரு திசைகளிலும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, ஹோப் மற்றும் மெரிட் இடையேயான நெடுஞ்சாலை 5 கோக்கிஹல்லா இரு திசைகளிலும் மூடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், இப்பகுதியில் தேவையற்ற பயணங்கள் அனைத்தையும் தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.