திணைக்களம் வலுவான புயல் எச்சரிக்கையொன்றினை பிறப்பித்துள்ளது.
இதற்மைகய அங்கு, பலத்த மழை மற்றும் பலத்த காற்று வெள்ளிக்கிழமை வரை தொடரும் மற்றும் நாள் முழுவதும் நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதேபோல், கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம், மாகாணத்தின் பெரும்பகுதிக்கு ஒரு சிறப்பு வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதில், மத்திய கடற்கரை மற்றும் வான்கூவர் தீவின் சில பகுதிகளில் அதிக அளவு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்குவாமிஷ், மெட்ரோ வான்கூவர் மற்றும் ஃப்ரேசர் பள்ளத்தாக்கின் பிரிவுகளும் குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெள்ளப்பெருக்குக்கான வாய்ப்பு இருப்பதாகவும், அதிக உயரத்தில் உள்ள பகுதிகள் சில ஈரமான பனிப்பொழிவை அனுபவிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.