கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களிலும் புது வருடம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பு உற்சாகமாக கொண்டாடப்படுகின்றன. கோயில்கள், தேவாலயங்களில் புது வருடத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
அத்துடன், சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவு முதலே புத்தாண்டுக் கொண்டாட்டம் களைகட்டியது. சென்னை மெரினா கடற்கரையில் குழந்தைகள், இளைஞர்கள், இளம்பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் நேற்று இரவு திரண்டதுடன் பட்டாசுகள் வெடித்தும் வாழ்த்துக்கள் தெரிவித்தும் இனிப்புகள் பரிமாறியும் புத்தாண்டை வரவேற்றனர்.
குறித்த கொண்டாட்டத்தை கருத்திக்கொண்டு மெரினா காமராஜர் சாலையில் சாந்தோம் தேவாலயத்தில் இருந்து போர் நினைவுச் சின்னம் வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்ததுடன் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், கிழக்கு கடற்கரைச் சாலையை ஒட்டிய விடுதிகளிலும் பல்வேறு ஆடல், பாடல், கலை நிகழ்ச்சிகள் விடிய விடிய நடந்தன. பிரதான சாலைகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டடு இருந்தனர்.
மேலும் இந்திய மத்திய அரசால் அண்மையில் கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மக்கள் இந்த புதுவருடத்தினை எதிர்கொண்டுள்ளனர்.
எவ்வாறாயினும் குறித்த போராட்டடங்களுக்கு மத்தியில், மக்கள் சிறப்புற இந்த ஆண்டில் புத்தாண்டை வரவேற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.