எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்படலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த வரவு செலவு திட்ட கூட்டத்தொடர் ஏப்ரல் மாதம் வரையில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டம் விரைவில் கூடி இந்த விவகாரம் குறித்து ஆராயவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் உரையுடன் வரவுசெலவு கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளதாகவும், அதே நாளில் பொருளாதார ஆய்வறிக்கையும் தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பொருளாதார மந்த நிலை நிலவிவரும் இந்த காலப்பகுதியில் இந்த வரவு செலவுத்திட்ட கூட்டத்தொடர் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 2வது முறையாக ஆட்சி அமைத்து 7 மாதங்களாகின்றன. இது ஏற்கனவே தனது முதல் பொது வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்து விட்டது. நாட்டின் முதல் முழு நேர நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன், இதை தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.