முயற்சிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமிழகம், தீவிரவாதிகள் கூடாரமாக மாறிவருவதாக பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.
தமிழகம் அமைதி பூங்காவாகவே திகழ்ந்து வருகிறது. ஆனால் அதை சிலர் சீர் குலைக்க முயற்சிக்கின்றனர் எனவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அத்துடன் தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் தேசிய விருது பெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.