முறையில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தை பிரதேச மக்கள் தடுத்து நிறுத்தி கைப்பற்றியுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வு செய்வதற்கு மக்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வரும் நிலையில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சந்தர்ப்பத்தில் மூன்று டிப்பர் வாகனங்களில் மண் ஏற்றிக்கொண்டு செல்லப்பட்ட நிலையில் இரண்டு வாகனங்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒரு வாகனத்தை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் பிரதேச மக்களுக்கும் மணல் கொள்ளையர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.