குறிவைத்து அம்மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி குறித்த மாநிலத்தில் சில நாட்கள் தங்கியிருந்து கட்சி குறித்த செயற்பாடுகளில் அவர் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது பா.ஜ.க ஆளும் கட்சியாக செயற்பட்டு வரும், உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலை பல வருடங்களாக மிகவும் மோசமாகி வருவதா தெரிவிக்கப்படுகிறது.
இதனை சீர்செய்ய காந்தி குடும்பத்தின் வாரிசான பிரியங்கா காந்தி முழுநேர அரசியலில் இறங்க வேண்டும் என எழுப்பப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் அவர் இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானத்தை ஏற்று கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக திடீர் என தீவிர அரசியலில் இறங்கிய பிரியங்கா காங்கிரஸின் உத்தர பிரதேச பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, பிரியங்கா காந்தி முன்கூட்டியே ஆயத்தமாக முடிவு செய்துள்ளார்.
மேலும்குறித்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடத் தயார் என அறிவித்த பிரியங்காவிற்கு வரும் தேர்தல் பெரும் சவாலாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் கடந்த மக்களவை தேர்தலை போல பிரியங்கா காந்தியால் தாக்கம் எதனையும் செலுத்த முடியாது போகும் பட்சத்தில் பிரியங்காவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும்என்பதால் உத்தர பிரதேசத்தின் லக்னோவில் ஒரு மாதத்துக்கு 10 முதல் 15 நாட்கள் வரை பிரியங்கா தங்கியிருந்து கட்சிப் பணிகளில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.