பிரதான நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியமைக்கு எதிராக சட்டமா அதிபர்கள் சீராய்வு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
சர்ச்சைக்குரிய வெள்ளை வான் ஊடகவியலாளர் சந்திப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜித அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதன் பின்னர் அவரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்திருந்தது.
அத்துடன், ராஜித்த சேனாரட்னவுக்கு வெளிநாடு செல்வதற்கு நீதவான் பயணத் தடை விதித்திருந்ததுடன், அவரது கடவுச் சீட்டை நீதிமன்றின் பொறுப்பில் வைத்திருக்கவும் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.