ஹைதராபாத்தில் பிரமாண்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பேரணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர். இதன்போது மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தை மட்டுமல்லாமல், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு உள்ளிட்டவற்றை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குறித்த சட்டத்திற்கு ஆதரவாகவும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.