முழுவதும் போராட்டங்கள் வலுவடைந்து வரும் நிலையில், ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாமைக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கக்கோரி ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்னொரு தரப்பினர் அவர்கள் இலங்கைக்கு மீள செல்வதே சிறந்த தீர்வு என கூறிவருகின்றனர்.
இந்த சூழலில் இலங்கை தமிழர்களின் நிலைப்பாடு குறித்து அறிந்து கொள்வதற்கு பிரபல ஊடகமொன்று அண்மையில் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது.
இதில் இலங்கை தமிழர்கள் இந்தியாவில் தங்கியிருக்க விரும்புவதாகவும், இந்திய குடியுரிமையையே விரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.