பிரச்சனை குறித்து விரைவில் பேச்சுவார்த்தை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இன்று(செவ்வாய்கிழமை) காலை அலரிமாளிகையில் ஆதவன் செய்திச் சேவை உள்ளிட்ட முக்கிய தமிழ் ஊடகங்களின் பிரதானிகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
இதன்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த தகவலினை வெளியிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘அழுதாலும் பிள்ளையை அவளே பெற வேண்டும்’. எனவே தமிழ் மக்களுக்கான பிரச்சனைக்கான தீர்வினை இந்தியாவிடம் எதிர்பார்க்க முடியாது. இதற்கான தீர்வினை இலங்கை அரசாங்கமே பெற்றுக் கொடுக்கும்.
இலங்கை – இந்திய மீனவர்களுக்கிடையிலான பிரச்சனைகளுக்கு தீர்வினை காண்பதற்கான முழுமையான அதிகாரத்தினை ஜனாதிபதியும் பிரதமரும் எனக்கு வழங்கியுள்ளனர்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இரு நாட்டு மீனவப்பிரதிநிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை சரியான முறையில் இடம்பெற்றிருக்கவில்லை.
எனினும் இந்த மாத இறுதியில் குறித்த பேச்சுவார்த்தையினை மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம். இதுகுறித்து இந்தியாவிற்கு கடிதம் எழுதியுள்ளோம்.
இறுதி பேச்சுவார்த்தை இந்திய தலைநகர் டில்லியில் நடைபெற்றிருந்தது. அடுத்த பேச்சுவார்த்தையினை கொழும்பில் முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம்.
வடக்கில் இருந்து வளங்கள் சுரண்டப்படுகின்றமை குறித்து ஒரு நிரந்தர தீர்வு விரைவில் பெற்றுக் கொடுக்கப்படும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.