உள்ள 3 ஏக்கர் காணியை சிங்கப்பூர் நிறுவனத்திற்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தை கடந்த அரசாங்கமே கைச்சாத்திட்டது என அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
அத்துடன் தேசிய வளங்களை தனியார் நிறுவனங்களுக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் வழங்குவது அரசாங்கத்தின் நோக்கமல்ல எனவும் குறித்த காணி சிங்கப்பூர் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதேவேளை, திட்டமிட்ட வகையில் காடாக்கப்பட்டுள்ள தோட்டக் காணிகள் தொடர்பாக தோட்டக் கம்பனிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் உரிய நடவடிக்கைகளை கம்பனிகள் மேற்கொள்ளாவிட்டால் அரசாங்கம் மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.