உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண் ஒருவர் செலுத்திய கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிகள் மீது மோதியதாலேயே இன்று (வெள்ளிக்கிழமை) இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த மூவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் அங்கு உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர் வயது 72 உடையவர் எனவும் தனது ஊரான அரசடித் தீவுக்கு செல்வதற்கு வீதியோரத்தில் நின்றவேளையில் இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காத்தான்குடி போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.