LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, January 3, 2020

யாழ். சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெறும் முறைகேடு: விசாரணைக்கு அமைச்சரவையில் தீர்மானம்!

கடந்த ஆட்சிக் காலத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மேற்கொள்ளப்படுகின்ற சென்னை விமான நிலையத்திற்கான விமானப் போக்குவரத்திற்காக பயணிகளிடம் இருந்து பெருந்தொகையாக விமான நிலைய வரி அறவிடப்படுகின்றமை தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்வதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டுக்கான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நேற்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றபோது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்படி விடயம் அமைச்சரவையின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

குறித்த அமைச்சரவைக் கூட்டத்தில், கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு பயணங்களை மேற்கொள்வோருக்கான விமான நிலைய வரி ஆறாயிரம் ரூபாயாக இருக்கின்றது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இருந்து பயணிக்கும் பயணிகளிடம் இருந்து பன்னிரெண்டாயிரம் ரூபாய் அறிவிடப்படுகின்றமையை யாழ்ப்பாண மக்களுக்கு மேற்கொள்ளப்படுகின்ற ஓரவஞ்சனையாகவே  பார்க்க வேண்டியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சுட்டிக் காட்டப்பட்டது.

மேலும், அடிப்படை வசதிகள் கூட முழுமையாக நிறைவு செய்யப்படாத நிலையில் கடந்த ஆட்சியாளர்களினால் தேர்தலை நோக்கமாகக் கொண்டு யாழ்ப்பாணம் விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

அத்துடன், கட்டுநாயக்கா விமான நிலையத்துடன் ஒப்பிடுகையில் குறைந்த பரப்பு தூரத்தைக் கொண்ட சென்னைக்கான பயணிகளிடம் இருந்து விமான நிலைய வரி இரண்டு மடங்காக அறவிடப்பட்டமை ஏற்றுக் கொள்ள முடியாதது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையின் நியாயத்தினை ஏற்றுக்கொண்ட அமைச்சரவை குறித்த விடயம் தொடர்பாக உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7