பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் திட்டத்தினை சீடாஸ் ஸ்ரீலங்கா நிறுவனம் முன்னெடுத்துள்ளது.
சீடாஸ் கனடா நிறுவனத்தின் 12 இலட்சம் ரூபாய் நிதியுதவியில் மட்டக்களப்பு- ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட ஏழு பாடசாலைகளைச் சேரந்த சுமார் 1500 மாணவர்களுக்கு முதற்கட்டமாக பாடசாலை உபகரங்கள் வங்கி வைக்கப்பட்டன.
சீடாஸ் ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவர் க.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைப்பின் செயலாளர் அ.சுகுமாரன், பொருளாளர் ஸே.சகாயராஜா, இணைப்பாளர் பு.புவிராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட மாவடிவேம்பு விக்னேஸ்வரா வித்தியாலயம், செங்கலடி விவேகாந்தா வித்தியாலயம், விநாயகர் கிராமம் அலைமகள் வித்தியாலயம், பலாச்சோலை விபுலாந்தா வித்தியாலயம், உதயன்மூலை விவேகாந்தா வித்தியாலயம், குமாரவேலியார் கிராமம் சித்தி விநாயகர் வித்தியாலயம், மயிலவெட்டுவான்.அ.த.க ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.