கூறப்படும் விடயத்தில் எவ்வித உண்மையும் இல்லை என்று அதன் நிர்வாக இயக்குனரும், தலைவருமான அஸ்வினி லோஹானி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ருவிற்றர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள அவர், எயார் இந்தியா நிறுவனம் விமான சேவையை நிறுத்தப்போவதாகவும், அந்த நிறுவனம் மூடப்படப் போவதாகவும் வெளியான தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை எனக்குறிப்பிட்டுள்ளார்.
எயார் இந்தியா நிறுவனத்தின் விமான சேவை தொடரும் என்றும் கடன் சுமை இருந்தாலும் அதனால் பயணிகளுக்கும் பிற நிறுவனங்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் விமான சேவைகள வழங்கிவரும் மிகப்பெரிய நிறுவனமாக இப்போதும் எயார் இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.