வளாகத்திற்குள் மாணவர்கள் மோதிக் கொண்டதில் மாணவர் சங்கத் தலைவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஆசிரியர்களின் சங்கம் சார்பில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது திடீரென முகமூடி அணிந்த மர்மநபர்கள் மாணவர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர்.
இதில் மாணவர் சங்கத் தலைவரான ஆயிஷ் கோஷின் தலையில் படுகாயம் ஏற்பட்டது. மேலும் பல மாணவர்கள் பலத்த காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் வளாகம் வாசல் அருகே பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் காயமடைந்த மாணவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து டெல்லி முதல்வர் கூறுகையில் ‘‘பல்கலைக்கழகத்திற்குள் வன்முறை நடந்தது குறித்து கேள்விப்பட்டதும் அதிர்ச்சியடைந்தேன். பொலிஸார் உடனடியாக வன்முறையை நிறுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.