ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அங்கு தொடர்ந்து கடுமையான பனிப்புயல் வீசி வருவதால், மின் வழங்கும் பணிகள் சற்று தாமதடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு தினத்தன்று வீசிய கடும் பனி புயலால், 160,000 வாடிக்கையாளர்களுக்கு மின்தடை ஏற்பட்டது. இதனை சீரமைக்கும் பணிகள் முழுமையடைந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் ஆயிரக்கணக்கானோருக்கு மின்தடை ஏற்பட்டுள்ளது.
மின்சாரம் இழந்த வாடிக்கையாளர்களில் பெரும்பாலோர் லோயர் மெயின்லேண்ட் மற்றும் சன்ஷைன் கடற்கரை பகுதியை சேர்ந்தவர்கள் என ஹைட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், வன்கூவர் தீவு மற்றும் தொம்சன், ஒகனகன், கூட்டெனே மற்றும் வடக்கு பிராந்தியங்களிலும் மின்தடை ஏற்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியா- ஹைட்ரோ அதன் இணையதளத்தில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து பகுதிகளையும் பட்டியலிட்டுள்ளது.