தீவிபத்தில் சிக்கிய ஒருவர், உயிராபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆண் ஒருவரே இவ்வாறு உயிராபத்தான காயங்களுடன் விக்டோரியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மிடில்செக்ஸ்-லண்டன் அவசர மருத்துவ சேவைகள் தெரிவித்துள்ளது.
ஒயிட் ஓக்ஸ் சுற்றுப்புற பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் தீவிபத்து சம்பவவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த லண்டன் தீயணைப்புத் துறையும், அவசரகால குழுவினரும் கடுமையாக போராடி தீயினை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
எனினும், குறித்த வீடு கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், இதனால் 100,000 அமெரிக்க டொலர்கள் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தீக்கான காரணம் இன்னும் அறியப்படாத நிலையில், இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.