கட்சியின் சார்பிலேயே போட்டியிடுவேன். வேறு கட்சிக்கு ஒருபோதும் செல்லமாட்டேன் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்தலின்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் வாய்ப்பு வழங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பெருமளவு பணம் கேட்டதாக இணையத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எனது மக்களுக்கான சேவை ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாகவே இருக்கும்.
எந்தக் கட்சிக்கும் நான் செல்லப்போவதில்லை. அதற்கான பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நான் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராகவே யாழ்ப்பாணம் தேர்தல் தோகுதியில் போட்டியிடுவேன்.
எனவே இது தொடர்பாக வெளிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானது” என குறிப்பிட்டுள்ளார்.