(எஸ்.எம்.எம்.முர்ஷித்.
இலங்கை நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் எண்ணக்கருவுக்கு அமைய இலங்கையை அழகுபடுத்தும் வேலைத் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பல்வேறு இடங்களில் சுவரோவியங்கள் வரையப்படுகின்றது.
அந்தவகையில் கிறீன் எறாவின் சுவரோவியம் வரையும் வேலைத் திட்டத்தின் முதலாவது சுவரோவியம் ஓட்டமாவடி தேசிய பாடசாலை சுவரில் வரையப்பட்டு மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது.
கிறீன் எறாவின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஸீம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஹபீப் றிபான், ஓட்டமாவடி பிரதேச சபை ஓட்டமாவடி பிரதி தவிசாளர் யூ.எல்.அஹமட் லெப்பை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கல்குடா முஸ்லிம் பிராந்திய பொறுப்பாளர் யு.முஸ்தபா, ஓட்டமாவடியில் தேசிய பாடசாலை அதிபர், மற்றும் ஓவியர்களான ஏ.எம்.சமீம், எம்,பஸாரத், எம்.முன்ஸீர் உட்பட கிறீன் எறாவின் தொண்டர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
ஓட்டமாவடி பிரதேசத்தின் பெயரிலான ஆங்கில எழுத்தில் ஓட்டமாவடி பிரதேச பிரபல்யங்கள் மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள பிரபல்யங்களை பரதிபலிக்கும் வகையில் குறித்த ஓவியம் வரையப்பட்டுள்ளது.
கிறீன் எறாவின் ஏற்பாட்டில் தொடர்ந்தும் பல இடங்களில் ஓவியம் வரைவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தலைவர் எம்.எச்.எம்.அஸீம் தெரிவித்தார்.
வீதியோரங்களிலுள்ள வெற்று சுவர்களை ஓவியங்கள் மூலம் அழகுபடுத்தும் பணியினை இளைஞர்கள், யுவதிகள் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இளைஞர்களின் நேரத்தை பயனுள்ள விதமாக மாற்றுவதுடன் அவர்களின் சிந்தனைகளை சித்திரமாக்கும் திட்டம் மிகவும் வரவேற்பை பெற்று வருகிறது.