சட்டப்பேரவையில் தனிநபர் தீர்மானம் இயற்ற தி.மு.க கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்த மனுவை இன்று (வியாழக்கிழமை) தி.மு,க சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் குறித்த கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இது குறித்து ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள ஸ்டாலின், “வருகிற 6ம் திகதி கூட உள்ள தமிழக சட்டப்பேரவையில் கேரளாவை போன்று குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று முதல்வர் பழனிசாமிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
குடியுரிமைச் சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் மேற்குவங்கம், பஞ்சாப், கேரளா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் அதை தங்கள் மாநிலங்களில் அமுல்படுத்தமாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் நாட்டிலேயே முதன்முறையாக இச்சட்டத் திருத்தத்தை எதிர்த்து கேரள சட்டமன்றத்தில் டிசம்பர் 31ம் திகதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.