வேலுப்பிள்ளை கணநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று(வெள்ளிக்கிழமை) அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
வேலுப்பிள்ளை கணநாதன் உகாண்டாவில் இலங்கையின் கௌரவ தூதுவராகக் கடமையாற்றும் அதேவேளை அவர் உகண்டாவுக்கான இலங்கையின் முன்னாள் உயர் ஸ்தானிகராவார்.
பிரபல தொழிலதிபரான கணநாதன், உகாண்டாவை வதிவிடமாகக் கொண்டுள்ளார்.
இவர் பண்டாரவளை புனித தோமஸ் கல்லூரி மற்றும் புனித ஜோசப்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.