திட்டங்களை மேலும் அபிவிருத்தி செய்வதற்கும், எதிர்காலத்தில் ஒரு “புதிய மூலோபாய ஆயுதத்தை” அறிமுகப்படுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளார்.
அரச ஊடகம் ஒன்றுக்கு இன்று (புதன்கிழமை) கருத்து தெரிவித்த அவர், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு இன்னும் இடம் இருப்பதாகவும் அணுவாயுதக் களைவு குறித்து முடக்கப்பட்டுள்ள பேச்சை, அரசியல் நலன்களுக்காக அமெரிக்கா இழுத்தடிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
அமெரிக்காவுடனான அதிகரித்துவரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த வாரம் நான்கு நாட்கள் தொழிலாளர் கட்சி அதிகாரிகளின் கூட்டத்திற்கு கிம் ஜோங் உன் தலைமை தாங்கினார்.
இதன்போது அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பித்தாள் உட்பட பலதரப்பட்ட விடயங்கள் பேசப்பட்டன.
இந்நிலையில் உலகம் விரைவில் புதிய ஆயுதத்தைக் காணும் என்றும் வட கொரியாவின் அணுவாயுதத் தற்காப்பு ஆற்றலை, அமெரிக்காவின் நடத்தையே தீர்மானிக்குமென அவர் கூறியுள்ளார்.