அங்கே முன் கூட்டியே தாக்குதல் நடத்த இந்தியாவுக்கு உரிமையுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் முகுந்த் நரவானே பாகிஸ்தானை எச்சரித்துள்ளார்.
இராணுவ தளபதி பதவியை ஏற்றபின் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும் என எச்சரித்தார்.
அவ்வாறு செய்யத் தவறினால் பயங்கரவாதத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க அவற்றிற்கு மூலாதாரமாக திகழும் இடங்களில் முன் கூட்டியே தாக்குதல் நடத்தும் உரிமை இந்தியாவுக்கு உள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன் சீன எல்லையில் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் என்றும் எவ்வித அச்சுறுத்தல்களையும் சமாளிக்க படைகள் தயார் நிலையில் இருக்கும் என்றும் ஜெனரல் நரவானே கூறினார்.
மேலும் முப்படைகளுக்கு தலைமை தளபதியை நியமித்தது ஒட்டுமொத்த பாதுகாப்பு திறனை மேம்படுத்தும் என்றும் தளபதி நரவானே இதன்போது குறிப்பிட்டார்.