.
போரினால் பாதிப்புற்று மாற்றுத்திறனாளிகளாக்கப்பட்ட முல்லைத்தீவு மற்றும் பரந்தன் பகுதிகளைச் சேர்ந்த குடும்பங்களிலுள்ள 500 மாணவர்களுக்கு ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய நிர்வாகத்தினால் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர்,நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை இந்த நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
முல்லைத்தீவில் “ஒளிரும் வாழ்வு” நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்ற நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களைச் சேர்ந்த 350 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து, வன்னி விழிப்புணர்வற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் பரந்தனில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்ற நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களைச் சேர்ந்த 150 மாணவர்களுக்கும் இவ்வாறு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.