அதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அகுரஸ்ஸ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அகுரஸ்ஸ பிரதேசத்தில் காதலித்த பெண்ணை உள்ளாச விடுதி ஒன்றிற்கு அழைத்துச் சென்று ஆபாச படங்களை எடுத்து, பின்னர் அதனை காட்டி தனக்கு பணம் கொடுக்குமாறு அந்த பெண்ணை நபர் ஒருவர் வற்புறுத்தியுள்ளார்.
இதனால் அந்த பெண் தனது அக்காவின் கிரடிட் அட்டையை குறித்த சந்தேகநபரிடம் கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து அதிலிருந்து பல தடவைகள் அவர் பணம் எடுத்துள்ளார்.
குறித்த பெண்ணின் அக்கா கிரடிட் அட்டையை பயன்படுத்திய பொழுது பணம் எடுக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வங்கியில் முறையிட்டபோது பணம் எடுக்கப்பட்டதாக வங்கியின் ஊழியர்கள் தெரிவித்தனர். பின்னர் அவர் அகுரஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
பொலிஸார் வங்கியின் சி.சி.டி.வி உதவியுடன் குறித்த சந்தேகநபரைபொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்போது குறித்த சந்தேகநபரின் தகப்பன் நேற்று கைது செய்யப்பட்ட தனது மகனை, குற்றங்களில் இருந்து விடுவிக்குமாறு அகுரஸ்ஸ குற்றத்தடுப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு 5 அரை இலச்சம் ரூபாய் பணம் கொடுத்த போது, குறித்த அதிகாரியினால் மாத்தறை குற்றத்துடுப்பு பிரிவிற்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இலஞ்ச ஒலிப்பு பிரிவின் அனுமதிக்கு இணங்க இவர் கைது செய்யப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.