ஹம்பாந்தோட்டை வரையிலான பகுதியை இவ்வருடத்தின் முதலாம் காலண்டுக்குள் நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கை துறைமுக அதிகார சபையின் புத்தாண்டு விழா இன்று (பதன்கிழமை) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் வீதி, பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இதனை தெரிவித்தார்.
5 ஆண்டுகள் பின்தள்ளப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை சீரமைத்தல், நாட்டின் மிக முக்கிய அபிவிருத்தி வளமான துறைமுகத்திற்கு அவசியமான கிழக்கு முனையத்தின் பணிகளை ஆரம்பித்து துறைமுகத்தை அபிவிருத்திச் செய்வதே இப்புத்தாண்டின் பிரதான எதிர்பார்ப்பாகும் என்றும் அவர் கூறினார்