நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
வங்கியில், 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பிச் செலுத்தாமல் விஜய் மல்லையா வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றதையடுத்து, அவரது சொத்துகளை முடக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது.
இதனை அடுத்து கடன்களை திருப்பி செலுத்த தயாராக இருப்பதாகவும், தனது மற்றும் தனது உறவினர்களின் சொத்துகளை முடக்கும் வேலைகளை நிறுத்தக் கோரியும் விஜய் மல்லையா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்தமனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வந்தது.
அப்போது வங்கிகளில் கடன் வாங்கி விட்டு வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ள விஜய் மல்லையா, கடன்களை திருப்பி செலுத்துவதாகக் கூறினாலும் இதுவரை ஒரு ரூபாயை கூட திருப்பி செலுத்தவில்லை என மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.
மேலும், உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கைக் காரணம் காட்டி லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது சம்பந்தமான வழக்கில் தீர்ப்பு வழங்கக்கூடாது என அவர் கோரி வருவதையும் நீதிபதிகளிடம் சுட்டிக்காட்டினார்.
இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கை காரணம் காட்டி உலகிலுள்ள எந்த நீதிமன்றத்திலும் விஜய் மல்லையா கால அவகாசம் கூறுவதோ, வழக்கில் இருந்து தப்பிக்கவோ முயற்சி மேற்கொள்ளக்கூடாது என தெரிவித்தனர்.