அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்க பொதுமக்களுக்கு பாதுகாப்பு அமைச்சு காலக்கெடு விதித்துள்ளது.
அந்தவகையில் பெப்ரவரி 5 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை 7 நாட்கள் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை கடந்த ஆண்டு 09 ஆம் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் சட்டவிரோதமாக இராணுவத்தைவிட்டு தப்பியோடிய முப்படை உறுப்பினர்களுக்கும் பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் எதிர்வரும் பெப்ரவரி 12 திகதி வரை ஒரு வாரம் பொது மன்னிப்பு காலம் வழங்கப்படுவதாகவும் அவ்வாறு விட்டுச்சென்றவர்கள் இந்த காலத்திற்குள் மீண்டும் சேர அல்லது இராஜினாமா செய்துகொள்ளுமாறும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.