விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் 63 கனேடியர்களும் அடங்குவதாக உக்ரேனிய வெளியுறவு அமைச்சர் வடிம் பிரிஸ்ரைகோ (Vadym Prystaiko) தெரிவித்துள்ளார்.
இவ்விபத்தில் ஈரான், உக்ரைன், சுவீடன், ஆப்கானிஸ்தான், பிரித்தானியா மற்றும் ஜேர்மன் பிரஜைகளும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனுக்குச் சொந்தமான போயிங்-737 என்ற விமானம் ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு அருகில் விபத்துக்கு உள்ளானது. மேலும் இயந்திரக் கோளாறு காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானம் பயணத்தை ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.