விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் 60 பேர்வரை காயமடைந்துள்ளதாக பென்சில்வேனியா அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா பேருந்தும் நீண்ட நீண்ட டிராக்டர் வாகனங்கள் சிலவும் ஒன்றுடன் ஒன்று மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பிட்ஸ்பேர்க்கிலிருந்து 40 மைல் தொலைவில் உள்ள மவுண்ட் ப்ளெசண்டில் மேற்கு திசையில் 86 மைல் தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பான பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.