குளவி கொட்டுக்கு இலக்காகி 42 மாணவர்கள் உட்பட 45 பேர் காயம்
நுவரெலியா நகரில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு
அருகில் குளவி கொட்டுக்கு இலக்காகி 45 பேர் காயமடைந்துள்ளனர்.
இதில் 42 மாணவர்களும் 3 ஆசிரியர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் காயமடைந்த அனைவரும் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.