LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, January 5, 2020

நடிகர் கலாபவன் மணியின் மரண விசாரணை : 35 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்தது சி.பி.ஐ!

நடிகர் கலாபவன் மணியின் மரணத்தில் சந்தேகம்
இருப்பதாக அவரது சகோதரர் இராமகிருஷ்ணன் சி.பி.ஐ.யின் விசாரணையை கோரியிருந்த நிலையில், சி.பி.ஐ. இந்த விவகாரம் குறித்து 35 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

குறித்த அறிக்கையில், “கலாபவன் மணிக்கு பச்சையாக காய்கறிகளை சாப்பிடும் பழக்கம் இருந்திருக்கிறது. அதன் வழியாகவே, ‘குளோரோபைரிபாஸ்’ வேதிப்பொருள் அவரது உடலுக்குள் சென்றிருக்க வேண்டும். அது மட்டுமின்றி,  மதுவுடன் எத்தனோல் கலந்து குடிக்கும் பழக்கமும் அவருக்கு இருந்திருக்கிறது.

கல்லீரல் கெட்டுப்போனதால் அந்த எத்தனோலை அவர் உடலால் வெளியேற்ற முடியவில்லை. மேலும், தினமும் 15 ‘டின்’ வரை பியர் குடிக்கும் பழக்கமும் அவருக்கு இருந்திருக்கிறது. எனவே தீவிர மது பழக்கத்தால்தான் கல்லீரல் பாதிக்கப்பட்டு கலாபவன் மணி இறந்திருக்கிறார்” என அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தின் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி அருகிலுள்ள குன்னி சேரியை பூர்வீகமாகக் கொண்டவர் ராமன்மணி. சிறுவயதில் இருந்தே நடிப்பு, இசை, நகைச்சுவை என பன்முகத்தன்மைகளை கொண்ட இவரால் ஆரம்பத்தில் சினிமா துறையில் சோபிக்க முடியாமல் போனது. இதற்கு காரணமாக அவரது கருத்த தேகமும், சாதி பாகுப்பாடும் காணப்பட்டது.

ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி திரைப்படத்துறையில் காலடி எடுத்து வைத்த இவர்,  தமிழ், மலையாளம்,  தெலுங்கு திரையுலகில் கலாபவன் மணியாக அவர் கோலொச்சினார்.

ஆட்டோ ஓட்டுனராக தனது வாழ்வைத் தொடங்கிய கலாபவன் மணி  1995-ல் வெளியான “அக்ஷரம்” என்னும் மலையாளப் படத்தில் ஆட்டோ ஓட்டுனராகவே அறிமுகம் ஆனார். மலையாளத்தில் நாயகனாக பல படங்களில் நடித்திருந்தாலும்  குணச்சித்திர பாத்திரத்தில் தமிழிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்திருக்கிறார். ‘ஜெமினி’ திரைப்படத்தில் விக்ரமிற்கு வில்லனாக ‘தேஜா’ என்ற பாத்திரத்தில் இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.

இவ்வாறு திரைப்படத்துறையில் மட்டுமன்றி பிற்காலத்தில், அரசியலிலும் கால் பதித்தார். இந்த காலப்பகுதியில், கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் கேரளத்தின் சாலக்குடியில் உள்ள தனது பண்ணை வீட்டில் நண்பர்களுடனான மதுவிருந்தின் போது கலாபவன் மணி திடீரென மயங்கிவிழுந்தார். தொடர்ந்து சிகிச்சைக்காக எர்ணா குளம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மார்ச் 6ஆம் திகதி  உயிரிழந்தார்.

இந்நிலையில், கலாபவன் மணியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரர் இராமகிருஷ்ணன் முறைப்பாடு அளித்தார். குறித்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார்,   அவரது உடலில் ‘குளோரோபைரிபாஸ்’ எனும் பூச்சிக்கொல்லி மருந்தும், ‘ஆர்கானோ பாஸ்பேட்’ நச்சுப் பொருளும் கலந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.  இதன் தொடர்ச்சியாக,  ஹைதராபாத்தில் நடந்த உடற்கூறாய்வில்,  அவரது உடலில் மெத்தனோல் கலந்திருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து அவரது நெருங்கிய நண்பர்கள் 6 பேரிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவர்கள் நிரபராதி என்பது நிரூபணமாகியது.

குறித்த விசாரணைகளில்  திருப்தியில்லாத கலாபவன் மணியின் சகோதரர்  சி.பி.ஐ. விசாரணை கோரி எர்ணா குளம் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து,  இந்த வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ. கலாபவன் மணிதற்போது 35 பக்க அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7