குற்றச்சாட்டில் 19 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, பொலன்னறுவை, மனம்பிட்டி தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமான பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் பயணித்த இரண்டு முச்சக்கர வண்டிகளும், மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள், புதையல் தோண்டும் நோக்கில் குறித்த பகுதிக்கு சென்றிருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனனர்.
அத்துடன் கைதானவர்களிடமிருந்து தேசிக்காய், கடல் மணல் என்பன மீட்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் குருநாகல், நாரம்மல, வெலிகந்த, தெஹியத்தகண்டி மற்றும் புளஸ்திபுர ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வெளியேறும் பகுதிக்கு அருகில் தடைசெய்யப்பட்ட வலயத்தில் உள்நாட்டு வெளிநாட்டுப் பயணிகளுக்கு இடையூறு விளைவித்ததாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் கைதானவர்கள் 31 முதல் 68 வயது மதிக்கத்தக்கவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.