தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரனுக்கு 15 நாட்கள் பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரவிசந்திரனை ஒருமாதம் பிணையில் விடுதலை செய்யக்கோரி, அவரது தாயார் ராஜேஸ்வரி உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனு இன்று (திங்கட்கிழமை) நீதிபதிகளான டி.ராஜா, புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட நிலையில் மேற்படி பிணை வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது ரவிசந்திரனுக்கு எதிர்வரும் 10 முதல் 25 ஆம் திகதிவரை பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் கடந்த 28 ஆண்டுகளாக சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இவர்களின் விடுதலையை வலியுறுத்தி தமிழகத்தின் பல கட்சிகள் கோரிக்கை விடுத்துவருகின்ற நிலையில், இந்த விவகாரத்தில் ஆளுநரே முடிவெடுக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.