அமெரிக்காவில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக கிட்டத்தட்ட 6,000 முறைப்பாடுகள் Uber மூலமான பயணங்களின் போது கிடைக்கப் பெற்றுள்ளது.
எனினும் 2018ஆம் ஆண்டில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகள் அதிகரித்த நிலையில் அதன் பின்னரான காலப்பகுதியில் குறித்த சம்பவங்கள் 16 வீதம் குறைந்துள்ளன.
இதேவேளை, Uber பயணிகளால் சாரதிகளுக்கு எதிராகவே அதிகளவில் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இரண்டு ஆண்டு காலப்பகுதியில் 2.3 பில்லியன் அமெரிக்க பயணங்களில் 5,981 பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
இந்நிலையில், அனைவரதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அதிக அக்கறை காட்டிவருவதாக உபெர் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது மொத்த பயணங்களில் 99.9 வீதம் பாதுகாப்பு பிரச்சினைகள் இல்லையென அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
உபெர் உலகம் முழுவதும் வளர்ந்து வரும் ஒரு நிறுவனமாகும். எனினும் அண்மையில் லண்டனில் இயங்குவதற்கான உரிமத்தை அந்நிறுவனம் இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.